புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஏப்., 2020

கோத்தா பேச்சு:போராட்டம் கைவிடப்பட்டது

அரசினது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவந்த கிராம சேவையாளர் சங்கம் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பினையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகிய கிராம உத்தியோகத்தர்கள இன்று (18) முதல் குறித்த பணிகளை மீண்டும் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலணியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னரே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 52 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிதியுதவி வழங்கப்படவுள்ளது.