புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஏப்., 2020

விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்கள்: அரசு எச்சரிக்கை

விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விலை மலிவாக பொருட்கள் கிடைக்கும் என்பதற்காக கொரோனா வைரஸ் எல்லைக்கட்டுப்பாடுகளை மீறி அண்டை நாடுகளுக்கு ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.


விலைவாசி அதிகம் உள்ள சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சாதாரணமாகவே விலை மலிவான பொருட்கள் கிடைக்கும் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலிக்கு அடிக்கடி ஷாப்பிங் செல்வதுண்டு.

ஆனால், கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக சுவிஸ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இருந்தும், தொடர்ந்து மக்கள் எல்லை தாண்டி ஷாப்பிங் செல்வது தெரியவந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.


அப்படி ஷாப்பிங் செல்பவர்கள் சுவிட்சர்லாந்துக்கு திரும்பும்போது அவர்களுக்கு 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.


இது பொருட்களை வாங்குவதற்கான தண்டனை அல்ல, எல்லை பாதுகாப்பு படையினரின் வேலைக்கு இடையூறை ஏற்படுத்தியதற்கான தண்டனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினர்களை காணச் செல்வதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ, மருத்துவ சிகிச்சைக்காகவோ, அல்லது வேறு முக்கிய காரணங்களுக்காகவோ எல்லை தாண்டி அண்டை நாடுகளுக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை.