18 ஏப்., 2020

கிளிநொச்சி சதோசவில் நடப்பது என்ன?? விசாரணை நடாத்துமாறு மாவட்ட செயலர் உத்தரவு.

.
கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக விசார ணை நடாத்துவதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கண்டவாறு கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியி ருக்கின்றார். குறித்த சதோச விற்பனை நிலையத்தில் பெருமளவு பொருட்கள் கொள் வனவு செய்யப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து ஊடகவியலாளர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட் டதுடன், அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக,

மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.