புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஏப்., 2020

பிரான்சில் இன்று 642 சாவுகள் - 16.000 சாவுகளை நெருங்கும் பிரித்தானியா
சர்வதேசம் 156.000 சாவுகளைத் தாண்டிச் செல்கின்றது. பிரித்தானியா இன்று மட்டும் 900 சாவுகளுடன் கிட்டத்தட்ட 16.000 சாவுகளைத் தாண்டுகின்றது. அமெரிக்கா ஏழு இலட்சம் தொற்றாளர்களைத் தாண்டி 37.500 பேரை இழந்துள்ளது. ஸ்பெயினும் 20.000 சாவுகளைத தாண்டி உள்ளது.
இந்நிலையில், பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்
24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 642 பேர் சாவு
வைத்தியசாலையில் 364 சாவுகளும், வயோதிபர்கள் பராமரிப்பு இல்லங்களில் 278 சாவுகளும் பதிவாகி உள்ளன.
மொத்தச் சாவுகள் 19.323
வைத்தியசாலையில் சாவுகள் 11.842
வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து சாவுகள் 7.481
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 30.639
உயிராபத்தான நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 5.833
37.000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.