![]() ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதாக வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். |
-
12 அக்., 2025
ஜெனிவாவில் அர்ச்சுனாவின் செயற்பாடு- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம்! [Sunday 2025-10-12 17:00]
5வது கட்ட நிதியை வழங்க ஐஎம்எவ் நிபந்தனை! [Sunday 2025-10-12 17:00]
![]() சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், ஐந்தாவது ஆய்வை நிறைவு செய்து நிதியை விடுவிக்க இலங்கை இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஐந்தாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு, அரசாங்கம் பின்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். |
ஐ.நா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு 3.8 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை! [Sunday 2025-10-12 17:00]
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, 2025 ஒக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரையிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு நிதியளிக்க, 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அதாவது இலங்கை ரூபாயில் 1.1 பில்லியன்களை கோரியுள்ளது. |
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் முடிவு! [Sunday 2025-10-12 17:00]
![]() பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் ஆகியவற்றின் பின்னணியில், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிப்பதற்கான நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. |
இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்! [Sunday 2025-10-12 07:00]
![]() உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய வான்வழி ஏவுகணை தாக்குதலில் தலைநகர் கீவ் மற்றும் எட்டுக்கும் மேற்பட்ட நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,40,000 பொதுமக்கள் இந்த மின்தடை காரணமாக இருளில் மூழ்கியுள்ளனர். |
நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
Entr
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை! [Saturday 2025-10-11 15:00]
![]() மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
11 அக்., 2025
இமயமலை உச்சியில் சூப்பர்ஸ்டார்! மகாவதார் பாபாஜி குகையில் ஆழ்ந்த தியானம்! ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து அசத்தல்!

உலகெங்கும் உள்ள கோடான கோடி ரசிகர்களின்
அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட பெண் மரணம்! [Saturday 2025-10-11 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
கிளிநொச்சியில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்,2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவேந்தல் நிகழ்வு! [Saturday 2025-10-11 06:00]
![]() தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது |
ஏக்ய ராஜ்யவுக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சி வாக்களிக்கும்! [Saturday 2025-10-11 06:00]
![]() சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார் |
அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை-கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம்! [Saturday 2025-10-11 06:00]
![]() தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் |
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது |
10 அக்., 2025
இன்னும் இரண்டு நாட்களில்... சுவிட்சர்லாந்துக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி
ஞாயிற்றுக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருவதால், சுவிட்சர்லாந்து செல்லும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இனி மின்னணு முறையில் முன்பதிவு செய்யவேண்டியிருக்கும்.
விமானத்தில் அசைவ உணவு வழங்கியதால் உயிரிழந்த இலங்கையர்! [Friday 2025-10-10 16:00]
![]() கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், சைவ உணவு கேட்ட இலங்கையர் ஒருவருக்கு அசைவ உணவு சாப்பிட்டதால் மரணம் சம்பவைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |