அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, அதாவது, நாளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருகிறது.
Entry/Exit System (EES) திட்டம்
EES திட்டத்தின்படி, நாளை முதல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத பிற நாடுகளின் பயணிகளும், எல்லையில், தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
அத்துடன், உங்களிடம் போதுமான பணம் உள்ளதா, திரும்ப வருவற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டீர்களா, ஹொட்டல் முன்பதிவு செய்துவிட்டீர்களா, உங்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளதா என்னும் கேள்விகளும் கேட்கப்படும்.
ஆக, ஷெங்கன் பகுதிக்குச் செல்லும் பிரித்தானியர்கள், நாளை முதல் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.