ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் சபோரிஜ்சியா பிராந்தியத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் 7 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும், செர்காசி பிராந்தியத்தில் 10 பேர் காயமடைந்து இருப்பதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்சோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அப்பாவி மக்களை இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க உறுதியான நடவடிக்கை வேண்டும் என்று சர்வதேச நட்பு நாடுகளுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். |