திட்டச் செலவுகள் பயணச் செலவுகள், புதிய ஆட்சேர்ப்புகள், பயணங்களின் போது உள்ளூர் விளக்கம் தொடர்பான ஒப்பந்தச் சேவைகள், செயற்கைக்கோள் படம் பகுப்பாய்வு போன்றவற்றை ஈடுகட்டுவதாக இந்த நிதி கோரிக்கை கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு, ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையாகும். ஜெனீவாவை தளமாகக் கொண்ட, இந்தப் பொறுப்புக்கூறல் திட்டம் 2021 இல் ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அத்துடன் 2025, ஒக்டோபர் 6 அன்று இலங்கை மீதான புதிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தின் ஆணை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பொறிமுறையை இலங்கையின் அரசாங்கங்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றன |