இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் தியாகமும் வீரமும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். |