திங்கள், ஏப்ரல் 29, 2019

திண்டாடுகின்றது இலங்கை

முஸ்லீம் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இலங்கை திண்டாடிவருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில்,
உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்று, இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரில் இயங்கும் ​ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை, ஐ.எஸ் அமைப்பு, தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென, SITE இணையப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.