புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஏப்., 2019

இனவாதம் தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு

இனங்களுக்கிடையில் எந்தவொரு விதத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் அறிவிப்புக்களை விடுத்தல், ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துதல்,புகைப்படங்களை வெளியிடுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபடும் தனிநபர்கள், குழுக்கள் என்பவற்றுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

பொய்யான செய்திகளைப் பரப்புவதற்கு எந்தவகையிலாவது ஊடகங்களைப் பயன் படுத்துபவர்களுக்கு எதிராகவும் இந்த அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்புத் தரப்பினரை தவறாக வழிநடத்துவதற்கு பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால், இதுபோன்ற குற்றச் செயல்களிலிருந்து தவிர்த்து நடந்துகொள்ளும்படி பொதுமக்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் அமைச்சு கேட்டுக்கொள்கின்றது எனவும் அவ்வறிவித்தலில் மேலும் கூறப்பட்டுள்ளது