ஞாயிறு, ஜூலை 21, 2019

மனோகணேசன்-பிள்ளையான் கூட்டு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை சூத்திரதாயான பிள்ளையானை மனோகணேசன் சந்தித்துள்ளமை கடுமையான விவாதங்களிற்குள்ளாகியுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுக் கடந்த மூன்று வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர் மனோ கணேசன், தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பொதுவான நடப்பு அரசியல் சம்பந்தமாகவும் கடந்த கால, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாகத் தெரிவிந்த அமைச்சர் மனோ கணேசன், எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் பேசிய விடயங்களைத் தற்போது தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
எனினும் ரணிலிற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்காவிட்டால் கிழக்கில் பிள்ளையானின் ஆதரவை பெறவே பேச்சு நடந்ததாக தெரியவருகின்றது