புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2013

கோவிலில் காணிக்கையாக வழங்கிய 150 மாடுகள் இறந்தன
ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாசலத்தில் சிம்மாதிரி அப்பண்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள். திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டிக் கொண்டு பிரச்சினைகள் தீர்ந்ததும் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள்.

அங்குள்ள கோசாலையில் அந்த மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோசாலையில் பராமரிக்கப்படும் மாடுகள் கடந்த 1 மாதமாக இறந்து வருகின்றன. 1 மாதத்தில் மட்டும் 150 மாடுகள் இறந்துள்ளன.
நேற்று ஒரே நாளில் மட்டும் 25 மாடுகள் இறந்து விட்டன. இதையடுத்து கால்நடை மருத்துவ உதவி அதிகாரி ராஜ்குமார் மற்றும் மருத்துவர்கள் அங்கு வந்தனர். அப்போது கடுமையான வெயில் காரணமாகவும், அதற்கு ஏற்ப பராமரிப்பு இல்லாததுமே மாடுகள் இறக்க காரணம் என்று தெரியவந்தது.
இந்த கோசாலையில் 50 முதல் 60 மாடுகளை மட்டுமே பராமரிப்பதற்கு தகுந்த வசதிகள் உள்ளன. ஆனால் நூற்றுக்கணக்கான மாடுகள் இங்கு உள்ளன. இதனால் அவற்றை சரியாக பராமரிக்கவில்லை. தற்போது கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப அவற்றுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கப்படவில்லை.
கோசாலையில் இறந்த மாடுகள் அனைத்தும் ஜெர்சி வகையை சேர்ந்தவை. இந்த மாடுகளுக்கு வெயிலை தாங்கும் சக்தி கிடையாது. இதனால் வெயிலின் தாக்கத்தாலேயே மாடுகள் இறந்துள்ளன என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தன

ad

ad