புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2013

ஏழைகள், தொழிலாளர்களுக்கு குறைந்த விலைவில் மதுபானம்! முதல் அமைச்சர் உத்தரவு!
கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் உள்ள தன் அலுவலகத்தில் எல்லா துறை அதிகாரிகளையும் சுமார் 8 மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது அவர் மாநிலத்தில் வருவாயை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மதுவிற்பனையை அதிகரிப்பது பற்றி அதிகாரிகள் கூறினார்கள்.

இதையடுத்து சித்தராமையா ஒரு உத்தரவை வெளியிட்டார். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் குறைந்த விலையில் தரமான மதுபானங்களை தயாரித்து விற்க வேண்டும் என்று அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் சாராயம் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் மதுபானத்துக்காக அதிக விலை கொடுக்க வேண்டியதுள்ளது.
இதை கருத்தில் கொண்டே ஏழைகள் பயன்பெறும் வகையில் குறைந்த விலை மதுபான விற்பனைக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். புதிய முதல்வரின் உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அம்மாநில குடிமகன்கள் தெரிவித்துள்ளனர்

ad

ad