புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது.எதிர்வரும் டிச 6ம், 7ம், 8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக சுவிஸ் நாட்டில் இருந்தும் ஒரு தொகுதி மக்கள் பிரதிநிதிகள் இணைந்து கொள்கின்றனர்.
அரசவைத் தலைவர், உப தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படவுள்ளதோடு, ஈழவிடுதலைப் போராட்டத்தினை முன்நகர்த்தி செல்வதற்கான தீர்மானங்களும், செயற்திட்டங்களும் இந்த மூன்றுநாள் அமர்வின் பிரதான விடயங்களாக அமையவுள்ளன.
இதேவேளை இந்நாட்களில் பல வள அறிஞர்கள் பங்கெடுக்கின்ற செயலமர்வுத் தொடர்களும் இடம்பெறவுள்ளன.
தமிழர் தரப்பின் வெளியுறவுக் கொள்கையினை உருவாக்கும் பொருட்டு, �இந்து சமூத்திர பூகோள அரசியலும் எமது வெளியுறவுக் கொள்கையும்� எனும் தொனிப்பொருளிலான கருத்தாய்வு இச்செயலமர்வில் முக்கிமானதாக இடம்பெறவுள்ளது.
முதல்நாள் அங்குராப்பண நிகழ்வில் சமூக, அரசியல் தளத்தில் பங்காற்றுகின்ற அனைத்துலக பிரமுகர்கள் பலர் பங்கெடுக்க இருக்கின்றனர்.
இம்மூன்று நாள் அமர்வினையும் இணையவழி நேரஞ்சலாக உலகத் தமிழ் உறவுகள் காணும் வகையில் ஊடகங்கள் வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad