புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

தேர்தல் விதி முறைகளை மீறவில்லை :  தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கடிதம்
ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது புதிய திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளித்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
அனுப்பி உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்காடு தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை மீறவில்லை என்று தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமாருக்கு இன்று  விளக்கம் அளித்து உள்ளார்.


முதல்-அமைச்சரின் விளக்க கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்,’’தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு 9 மணிக்கு இ. மெயில் மூலம் விளக்கம் அனுப்பி இருந்தார். அதன் நகல் இன்று காலையில் என்னிடம் வழங்கப்பட்டது.

அதை உடனே டெல்லி யில் உள்ள தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பி வைத் துள்ளேன். அங்குள்ள தலைமை தேர்தல் ஆணை யர்கள் 3 பேர் முதல்-அமைச்சரின் விளக்க கடிதத்தை படித்து பார்த்து விட்டு முடிவை அறிவிப்பார்கள்’’என்று கூறினார்

ad

ad