புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014

மண்ணை கவ்விய ஸ்பெயின்: வெளியேற காரணம் என்ன?
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நெதர்லாந்துடன் தோற்ற நிலையில், சிலியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து உலகக்கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேறியது.
2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் ஸ்பெயின் அசத்தலாக விளையாடி கிண்ணத்தை வென்றது.
ஆனால் தற்போது பிரேசிலில் நடந்து வரும் உலகக்கிண்ண போட்டிகளில் ஸ்பெயின் தொடக்கத்தில் இருந்தே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
2010ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண போட்டிகளிலும் சரி, யூரோ 2012 போட்டிகளிலும் சரி ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டம் அசத்தலாக இருந்தது.
ஆனால் 2014ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டம் சரியில்லை. தற்காப்பு ஆட்டம் சரியில்லாததால் 2 போட்டிகளில் எதிர் அணிகளை 7 கோல்கள் அடிக்கவிட்டுள்ளது.
நெதர்லாந்திடம் தோல்வி அடைந்த பிறகு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜாவி ஹெர்னான்டஸ் மற்றும் ஜெரார்ட் பிக் ஆகியோரை நீக்கிவிட்டு பெட்ரோ ரோட்ரிகஸ், ஜாவி மார்டினஸ் ஆகியோரை அணியில் சேர்த்தார்.
மேலும் சிறப்பாக விளையாடும் கோகே காலதாமதமாக அணியில் சேர்க்கப்பட்டார். ஐகர் கசிலாஸ் மீது அதிக நம்பிக்கை வைத்தது மிகப் பெரிய தவறாகிவிட்டது.
பழைய ஆட்ட முறைகளால் முன்பு வெற்றி கிடைத்திருந்தாலும், தற்போது அது உதவவில்லை. காலத்திற்கேற்ப புதிய விளையாட்டு முறைகளை பின்பாற்றாததும் ஸ்பெயின் படுதோல்வி அடைந்ததற்கு ஒரு காரணம்.
பிரேசிலைச் சேர்ந்த காஸ்டா தங்கள் நாட்டு ஸ்டைலை பின்பற்ற வைக்க ஸ்பெயின் எந்த முயற்சியும் செய்யவில்லை.
சிலியுடனான போட்டியின் போது காஸ்டா திணறிவிட்டார். அதனால் முன்வரிசையில் விளையாடிய டீகோ காஸ்டாவை தெரிவு செய்தது தவறாகிவிட்டது.

ad

ad