பணம்... ஹைடெக்கான லைஃப்... அழகான தோற்றம்.. இதை எல்லாம் காண்பித்துதான் இளம் பெண்களை தன் வலையில் விழ வைத்து ஏமாற்றியிருக்கிறான் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞன் பொன்சிபி’என்று கடந்த இதழ்(2014 ஜூன் 14-17 தேதி) நக்கீரனில், “"காதல்... பெட்ரூம்... வீடியோ! 30 பேருடன் 19 வயது இளைஞன்' கல் லூரி மாணவிகளின் வாக்குமூலம்!'’ என்று அட் டைப்படக்கட்டுரை யாக வெளியிட்டிருந்தோம். என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த பொன் சிபியை நக்கீரன் இதழ் வெளியானவுடன் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி.ஜெயச் சந்திரன்.
பொன்சிபி, சிபியின் அம்மா ஹேமமாலினி, ஹேமமாலினியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ராஜா ஆகியோர் மீது காதலித்து ஏமாற்றியது, திருமணம் செய்து கொடுமைப்படுத்தியது, நகை, பணம் கேட்டு துன்புறுத்தியது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் (294, 323, 406, 417, 498, 506/1) வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
லேடனை தெரியுமா? பின்லேடன்... என்பதுபோல ஆளுங்கட்சி அரசியல் புள்ளிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு போலீஸுக்கு ரொம்பவே போக்கு காட்டிக்கொண்டிருந்த பொ...பொ...சிபி சிக்கியது எப்படி? அவனை லபக்கிய காக்கிகளிடமே கேட்டோம். ""பய பயங்கரமான ஆளாத்தான் இருப்பான் போலி ருக்கு. எதைப்பற்றியுமே அவனுக்கு கவலை இல்ல. கொஞ்சம்கூட பதட்டம் இல்ல. ரொம்பவே கேஷுவலா இருக்கான். அதுக்குக் காரணம், "ஆளுங்கட்சி சப்போர்ட் நமக்கு இருக்கு. போலீஸ் நம்பள ஒண்ணும் பண்ணமுடியாது'ங்குற திமிரு அவன் முகத்துல தெரியுது. போலீஸோட ட்ரீட்மெண்ட் இன்னும் கொஞ்சநாளில் புரிய ஆரம்பிச்சிடும். உங்க இதழ் வெளியானவுடன் திண்டுக்கல் டவுன் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, எஸ்.ஐ. உஷா உள்ளிட்ட போலீஸ் டீம் அரெஸ்ட் பண்ண ரெடியாகிடுச்சி.
மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி நம்மிடம், “""பொண்ணுங்கள ஏமாற்றி வீடியோ எடுக்க எப்படிடா மனசு வந்தது? ன்னு மகளிர் காவல்நிலைய மாடியில விசாரித்தபோது... சிரிச்சுக்கிட்டே இருந்தான். அப்புறம் கோபமா விசாரிக்க ஆரம்பிச்சதும்தான் பதில் சொல்ல ஆரம் பிச்சான். "என்னோட சொத்துக்களை சித்தப்பா அபகரிக்கப் பார்த்தாரு. உன் சித்தப்பாவை நான் டீல் பண்ணிக்கிறேன்... நீ ஒண்ணும் கவலப்படாத மச்சின்னு அறிமுகமானவன்தான் கபிலன். அவன் மூலமாத்தான் தினேஷ் பழக்கமானான். ஒருநாள் சர்ச்சுக்குப் போனப்போ ரெஜினா பழக்கமானா. என்னோட காஸ்ட்லி செல்ஃபோன், பைக், அழகை எல்லாம் பார்த்து மயங்கிட்டா. இதேமாதிரி ஏமாந்ததுதான் கல்லூரி மாணவி அனுசாவும்'னு இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமா வாயத்திறக்க ஆரம்பிச்சிருக்கான். இன்னும் உரிய முறையில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்'' என்கிறார் இன்ஸ்.
இதுகுறித்து, பாலபாரதி எம்.எல்.ஏ நம்மிடம், ""பல பெண்களை அந்தரங்க வீடியோ எடுத்திருக்கிறார்கள் சிபியும் அவனது நண்பர்களும் என்று, ஏமாந்த இளம்பெண்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, சிபியை கைது செய்ததோடு மட்டுமில்லாமல், அவனுக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரையும் கைது செய்து விசாரித்தால்தான் எத்தனை பெண்களை வீடியோ எடுத்து சீரழித்திருக்கிறான் என்ற உண்மை தெரியும். எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் கொடுக்க சென்றால் ரொம்பவே அலைக் கழிக்கிறார்கள். காவல்துறை ஆளுங்கட்சிக்கு பயந்து இன்னமும் அவனை மென்மையாக விசாரித்தால் உண்மை வெளிவராது. எங்களது போராட்டம் இன்னும் தீவிரமடையும்'' என்கிறார் கோபமாக.
வாய்திறக்க ஆரம்பித்த சிபியின் மூலம் இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவரப் போகிறதோ?