புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2019

தமிழர்கள் சமமான குடிகள் என்பதை 32 ஆண்டுகளுக்கு பின் ஜனாதிபதி உணர்த்தியுள்ளார் ;சுரேன்ராகவன்

இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிகள் என்பதனை முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உணர்த்தியிருப்பதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் இது தொடரபாக கருத்து தெரிவிக்கையில்;,  
முப்பத்திரெண்டு ஆண்டுகள் கடந்து ஒரு தமிழனான என்னை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பதன் மூலம் இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிமக்கள் என்பதனை ஜனாதிபதி உணர்த்தியிருக்கிறார். நாம் ஒன்றுபட்டு விழுந்த எம் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். 
அதற்கு நாம் எமது கல்வித்துறையினை வளர்க்க வேண்டும். எமது கல்வி வளர்ச்சிக்கு இந்திய அரசு செய்யும் உதவிகளை நாம் நன்றிக்கடனுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் கல்வித் திணைக்களத்திடம் ஓர்கோரிக்கை விடுகிறேன்.  
மாணவர்களைக் கஷ்டப்படுத்தாதீர்கள். எங்கள் வருகைக்காக மாணவர்கள், ஆசிரியர்களை வெயிலில் நிறுத்தாதீர்கள். நாங்கள் தான் மாணவர்களை மதிக்க வேண்டும். அடுத்த முறை நான் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் வாழ்ந்து முடிந்தாகிவிட்டது. 
வருங்கால உலகம் மாணவர்கள் கையில் உள்ளது. 21ஆம் நூற்றாண்டின் முக்கிய பகுதிகளை இன்றைய மாணவர்கள் தோளில் சுமக்கவுள்ளனர். உங்களுக்குள் இருக்கின்ற ஒருவன்  (மாணவன்) நாளைய நாயகனாக வேண்டும். அவன் பிரச்சினைகளை தீர்க்க வல்லவனாக இருக்க வேண்டும். வெறும் கட்டடங்களால் ஒரு உலகை உருவாக்க முடியாது. அந்த கட்டடத்தில் உள்ள புத்திக்கூர்மை உடையவர்களே நாளைய உலகை உருவாக்குவார்கள்.  
மாணவர்களாகிய நீங்கள் வீறுகொண்டு எழ வேண்டும். உலகம் உங்கள் வசப்பட வேண்டும். அத்துடன் காலமும் அரசியலும் என் உற்ற நண்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களை பறித்து விட்டது. அவர் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். காலம் சில வடுக்களை எம் மத்தியில் விட்டுச் சென்றுள்ளது. முழுச் சுதந்திர மக்களாக ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

ad

ad