30 ஜன., 2019

ஆனந்தபுரம்’ கையளிப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையால், மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட “ஆனந்தபுரம்” எனும் மாதிரிக் கிராமம், உத்தியோகபூர்வமாக மக்களிடம் இன்று (28) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இவ்வீடுகளை, மக்களிடம் கையளித்தார்.

இந்த மாதிரிக் கிராமம், செமட்ட செவன திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள 161ஆவது மாதிரிக் கிராமமாகும்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பார் சோ.கணேசமூர்த்தி உள்ளிட்டோரும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்