புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 மார்., 2020

44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.

உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தரப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.
இதேபோன்று, தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 144 தடை உத்தரவை அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவால், சொந்த ஊருக்கு செல்வோர் உள்ளிட்ட பலதரப்பு மக்கள் பேருந்து நிலையங்களில் திரளாக கூடியுள்ளனர். அரசின் தடை உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்புவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 144 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அறிவித்து உள்ளா