திங்கள், மார்ச் 28, 2016

ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்!

சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எ.எம்.எம்.றியால் இன்று தீர்ப்பளித்தார். சுகாதார பரிசோதகர் பி.சஞ்ஜீவன், நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, ஐஸ்கிறீம் வானின் சாரதிக்கும் விற்பனையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு அபராதம் விதித்தார்.