புதன், ஜூலை 20, 2016

மீனவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என கடற்படை அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக இலங்கைக் கடற்படையினரால் கைதான 70 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும்  இவர்களிடமிருந்து 
கைப்பற்றப்பட்ட 103 படகுகளையும் விடுதலை செய்வது சிரமமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 70 மீனவர்களையும் விடுதலை செய்வது குறித்து மீன்பிடித்துறை அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக 70 இந்திய மீனவர்களை கைது செய்ததுடன், 103 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.