புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2020

முடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவிற்கு எதிராக கைவிரித்தார் சீன அதிபர்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸை மிகவும் கொடுமையானது. இந்த வைரஸ் காரணமாக மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் உருவாகி உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை.

நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். மிக துரிதமாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் சில விஷயங்கள் நம்முடைய கையில் இல்லை.

மிக வேகமாக நாங்கள் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறோம். எல்லா நோயாளிகளையும் இங்கே கொண்டு வந்து ஒரே இடத்தில் சிகிச்சை மேற்கொள்ளப் போகின்றோம்.

இது எப்படி உருவானது என்று அதிகாரிகள் இன்னொரு பக்கம் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த கடுமையான சூழ்நிலையை கவனிக்க இராணுவம் களமிறங்கி உள்ளது.

இராணுவத்தின் மருத்துவர்கள்தான் நோயாளிகளை கவனித்து வருகிறார்கள்.

இப்போது எங்களால் உறுதியாக கூற கூடிய ஒரே விஷயம், இந்த வைரஸ் பரவுவதை எங்களால் தடுக்க முடியவில்லை, என்றுள்ளார்.

இதனால் தற்போது ஜி ஜிங்பிங் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாங்காங் போராட்டம் காரணமாக சீன அரசு நிறைய பிரச்சனைகளை சந்தித்தது.

அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வர்த்தக போரும் அந்த நாட்டை பாதித்தது தற்போது மிகப்பெரிய வைரஸ் அந்த நாட்டை கலங்க வைத்துள்ளது

ad

ad