புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜன., 2020

ஜநா அமர்வில் இலங்கை விவகாரம்:மகிந்த குருநாகலில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அவர் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனிடையே மகிந்த-கோத்தா தரப்பிற்கு தலையிடியை தருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.
இதன்போது, இலங்கை தொடர்பான அவதானிப்பு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் முன்வைக்கவுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் மேற்கொண்ட சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளரின் அறிக்கையும் 43ஆவது கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளது.