நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சடலமாக மீட்பு

இவரது மரணத்திற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்றும் எனினும் நஞ்சருந்தியே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவரது சடலம் நெடுந்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை , பிரதேச சபை நிர்வாகத்துடனும் இவருக்கு முரண்பாடுகள் இருந்ததாகவும் அதன் காரணமாக கடந்த 2 மாத காலமாக இவர் சபைக்கு சமூகம் தரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவரது இடத்தை நிரப்புவதற்கான வேற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இவரது தற்கொலைக்கு இவையும் காரணமாக அமையலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.