உரிமைகளுக்காக உயிர் நீத்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய யோகேஸ்வரன் எம்.பி
போரின் போது உரிமைகளுக்காக போராடிய தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அஞ்சலி செலுத்தியது.நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், போரில் கொல்லப்பட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போர் காரணமாக இடம்பெயர்ந்து இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் மற்றும் மீள்குடியேறிய மக்களுக்காக எந்த ஒதுக்கீடுகளும் செய்யப்படமை தொடர்பில் அவர் கண்டனம் வெளியிட்டார்.
போர் முடிவடைந்த போதிலும் வடக்கு கிழக்கில் பல்வேறு அட்டூழியங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் இந்து மத கோயில்கள் தாக்கப்பட்டு வருகின்றன எனவும் எஸ்.யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.