புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2013

பிரபாகரனுக்கு இலங்கை பாராளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரபாகரனின் பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த ஏனைய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரனின் போராட்டமானது நியாயமானது எனவும், அதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஒர் சுதந்திரப் போராட்டமாக கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் சிங்கத் தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீதரனின் உரைக்கு, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீதரன் ஆற்றிய உரையின் சர்ச்சைக்குரிய பகுதிகளை ஹன்சார்டிலிருந்து நீக்கிவிடுமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், பாராளுமன்றில் உரையாற்றிய பா.உ. சிறிதரன் சிவஞானம் அவர்களது உரையின் முழுவடிவத்தினையும் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஹன்சார்ட் இல் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்தும், மாவீரர்கள் குறித்தும் உரையாற்றிய சில பகுதிகளை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad