மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது
கொழும்பு, மருதானை, சங்கராஜ மாவத்தையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பாணந்துறை வலான மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டு தேடுதல் உத்தரவை கொண்டு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
விபச்சார விடுதியின் முகாமையாளர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பசறை, மொனராகலை, வலப்பனை, ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
விடுதியின் முகாமையாளருக்கு 2 லட்சம் ரூபா அபரதமும், பெண்களுக்கு தலா 5 ரூபா அபராதமும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.