வடமராட்சியில் வெகு சிறப்பாக புலிகளின் தலைவரின் பிறந்தநாள்! படையினர் சீற்றத்தில்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனது 59வது பிறந்த தினம் படைத்தரப்பினது கெடுபிடி முற்றுகைகளை தாண்டி இன்று அவரது சொந்த மண்ணான வடமராட்சியினில் மகிழ்வுடன்
கொண்டாடப்பட்டது. இரவு வேளை எவரும் எதிர்பாராத வண்ணமாக வெடிகள் வீதிகளினில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. எவரும் எதிர்பார்த்திராத இரவு வேளையினில் 7 மணி முதல் பரவலாக வெடிகளை வெடிக்க வைத்தும் சிற்றுண்டிகள் வழங்கியும் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள பேக்கரிகள் தோறும் படையினர் காவலிருக்க இன்றைய கொண்டாட்டம் நடந்துள்ளமை படைத்தரப்பினை சீற்றமடைய வைத்துள்ளது. எனினும் பின்னர் வெடிகள் கொழுத்தப்பட்ட இடங்களெங்கும் நள்ளிரவு தாண்டியும் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தவிசாளர் சதீஸின் வீடு தாக்கப்பட்டதன் எதிரொலியாக அதே நகரசபையினது ஈபிடிபி அங்கத்தவரொருவரது வீடு இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.இவ்விரு தாக்குதல் சம்பவத்தையும் கண்டித்து வல்வெட்டித்துறை நகரசபை இன்று கண்டன தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
