புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


அகிலேஷ் யாதவ் அதிரடி : 36 கட்சி நிர்வாகிகளை நீக்கினார்

நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்வியை  அடுத்து உ.பியில் , சமாஜ்வாடி கட்சியின் மூத்த நிர்வாகிகள் 36 பேரை நீக்கி அம்மாநில முதல் மந்திரியும்  சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.


80  பாராளுமன்ற தொகுதிகளை கொண்டு நாட்டிலேயே மிகப்பெரிய  மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சி படு தோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 73 தொகுதிகளை கைப்பற்றியது, காங்கிரஸ் இரண்டு தொகுதிகளையும் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு  மாநிலத்தில் ஆட்சியை பிடித்த சமாஜ்வாடி கட்சி மோசமான தோல்வியை பெற்றுள்ளது.
இதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 88 மந்திரி ரேங்க் கொண்ட தலைவர்களில் 36 பேரை அதிரடியாக நீக்கி முதல் மந்திரி அகிலேஷ் யாதவ்  உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் கட்சி  பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் பதவி விலகியதை போன்று நீங்கள் பதவி விலகுவீர்களா என்று அகிலேஷ் யாதவிடம் கேட்ட் போது, உத்தர பிரதேச அரசியல் சூழ்நிலையை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட முடியாது என்றார்.
மோடி அலை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய அகிலேஷ் யாதவ் இன்று மேலும் கூறுகையில், அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் மோடியுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார். நரேந்திரமோடி தலைமையில் இந்த தேர்தலை பாரதீய ஜனதா நாடு முழுவதும் 282 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

ad

ad