புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


யாழ். பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தடைகளையும் தாண்டி, இன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு மாணவர்களால் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்தவாரம் மூடப்பட்ட யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறக்கப்பட்ட நிலையில், நண்பகல் 11.15 மணியளவில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் சுமார் 500 மாணவர்கள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தை அண்டிய சூழலெங்கும் படையினர் குவிக்கப்பட்டிருந்த போதும் எதனையும் பொருட்படுத்தாது மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.
மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் கைலாசபதி அரங்கு நிரம்பி வழிந்தது.
முள்ளிவாய்க்காலில் பலியாகிய அனைத்து உறவுகளிற்கும் மௌன அஞ்சலியை செலுத்தியதுடன் தொடர்ந்து சுடரேற்றி பிரார்த்தித்தனர். அதன் பின்னராக அனைவரும் அமைதியாக கலைந்து சென்றிருந்தனர்.

ad

ad