புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014

தொற்றா நோய்களை தவிர்க்கும் வகையில் இராணுவத்தின் மருத்துவ பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் என்ற தொனிப் பொருளிலாளான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 
  இன் நிகழ்வில் ஆரோக்கியமான படை வீரர்களை உருவாக்கும் நோக்குடன் நச்சு மற்றும் இரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்தாத மரக்கறி வகைகளை
முகாம்களுக்குள் உற்பத்தி செய்து அவற்றை நாடு முழுவதிலும் உள்ள இராணுவத்தினருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   தற்பொழுது 20 வீதமான மரக்கறி வகைகள் இராணுவ முகாம்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக இவற்றை அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயாரத்நாயக்க தெரிவித்தார்.     இராணுவத் தளபதி மேலும் உரையாற்றுகையில்-   இராணுவ வீரர்கள் மத்தியில் திடீர் மரணம் மற்றும் தொற்றா நோய்களின் வீதம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது யுத்த காலத்தில் நிலைமைகளை கருத்திற்கொண்டு தன்னை தனது உடல் ஆரோக்கியத்தை உரிய முறையில் பராமரிக்க முடியாதிருந்தமை இதற்கு காரணமாக இருந்தது.   எனினும் யுத்தம் நிறைவுற்ற பின்னர் ஐந்து வருட காலப் பகுதிக்குள் இதுவரை 1200 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்களால் உயிரிழந்த 400 பேரும், தொற்றா நோய் காரணமாக உயிரிழந்த 400 பேரும் ஏனைய காரணங்களால் உயிரிழந்தவர்களும் அடங்குவர். எனவே இதனை கட்டுப்படுத்தும் பொருட்டே இந்த புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.   ஆரோக்கியமான இராணுவம், ஆரோக்கியமான தேசம் என்ற வேலைத் திட்டம் முதற் கட்டமாக யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளை தலைமையகத்திலிருந்து நாடு முழுவதிலும் உள்ள பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகங்கள், முகாம்களில் நடைமுறைப்படுத்தப்படும்.   இராணுவ வீரர்களின் நலனை கருத்திற்கொண்டே படை வீரர் மாதமான இம்மாதத்தில் இந்த வைத்தியசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   இதில் நாளொன்றுக்கு 1000 வீரர்கள் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்பொழுது 1500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதனை அதிகரிப்பது எமது நோக்கமல்ல.   அதேபோன்று இராணுவ வீரர்கள் வெளித் தோற்றத்தில் என்றும் ஆரோக்கிய மானவர்களே. ஆனால் அவர்கள் உடல் ரீதியிலும் அவ்வாறே இருக்க வேண்டும். எனவே தான் தேக ஆரோக்கிய பரிசோதனையில் சரியான பெறுபேறுகளை பெறாத இராணுவ அதிகாரிகளுக்கு தரமுயர்வு அல்லது பதவி உயர்வுகள் வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.   இதன் பலனாக தற்பொழுது பலர் தமது உடல் ஆரோக்கியம் உடற் பயிற்சிகள் தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது. யுத்தத்தை வெற்றி கொண்ட எமக்கு இதனை வெற்றி கொள்வது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயமல்ல.நாட்டை அழகுபடுத்த ஒத்துழைக்கும் நாம் எமது உடல் உறுப்புக்கள் தேக ஆரோக்கியம் தொடர்பிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.   நாடளாவிய ரீதியிலுள்ள எமது இராணுவ முகாம்கள் அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பார் பகுதி மேலும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்றமாக நாம் மைதானம், அணிவகுப்பு பிரதேசம், தலைமையகத்தை அழகுபடுத்தும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.இதன் காரணமாக தற்போது மதுபோதைகளை பாவிக்கும் அளவு இராணுவ வீரர்கள் மத்தியில் குறைந்து காணப்படுகிறது.   இராணுவ வீரர் என்பவர் சமூகத்தில் அனைவராலும் கெளரவமாக மதிக்கப்படக் கூடியவர்கள். எனவே ஆரோக்கியமான இராணுவ வீரர் ஒருவரை உருவாக்குவதன் மூலம் அவர்களை முன்மாதிரியாக வைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் என்றார்

ad

ad