புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014

எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன. இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை

இந்த தேர்தலில் கண்டிருப்பது அக்கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கட்சி பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அதை காரிய கமிட்டி நிராகரித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த கமல்நாத் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையான 543ல் 10 சதவீதம் இடங்களை பிடிக்கும் கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்க முடியும். ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களையே பெற்றுள்ளது. எனவே, நாடாளுமன்ற சபாநாயகர் தற்போதுள்ள விதிகளை தளர்வு செய்தாலோ அல்லது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் அங்கீகரித்தாலோதான் கமல்நாத் எதிர்க்கட்சி தலைவராக ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad