புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


யாழ்.மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு
2013ம் ஆண்டின் வாக்காளர் மதிப்பீடுகளின்படி யாழ். தேர்தல் மாவட்டத்தின் தொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 974 ஆக காணப்படுகின்றது.
கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 2012ம் ஆண்டு 68 ஆயிரத்து 589ல் இருந்து 2013ம் ஆண்டு 75 ஆயிரத்து 465 ஆக உயர்ந்திருக்கின்றது.
யாழ் . மாவட்டத்தில் 435 கிராம அலுவலர் பிரிவுகளும் கிளிநொச்சியில் 95 கிராம அலுவலர் பிரிவுகளுமாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் மொத்தம் 530 கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன.
2013ன் மதிப்பீட்டின்படி மொத்தம் யாழ். தேர்தல் மாவட்டத்தில் 630 வாக்காளர் நிலையங்கள் காணப்படுகின்றன.
யாழ். மாவட்டத்தில் ஊர்வாவற்றுறை தொகுதியில் 51 கிராம அலுவர்பிரிவுகளில் 21763 வாக்காளர்களும் வட்டுக்கோட்டை தொகுதியில் 39 கிராம அலுவர்பிரிவுகளில் 46416 வாக்காளர்களும், காங்கேசன்துறை தொகுதியில் 52 கிராம அலுவர் பிரிவுகளில் 62371 வாக்காளர்களும், மானிப்பாய் தொகுதியில் 43 கிராம அலுவலர் பிரிவுகளில் 53488 வாக்காளர்களும், கோப்பாய் தொகுதியில் 34 கிராம அலுவலர் பிரிவுகளில் 54836 வாக்காளர்களும்,
உடுப்பிட்டி தொகுதியில் 43 கிராம அலுவலர் பிரிவுகளில் 38943 வாக்காளர்களும், பருத்தித்துறை தொகுதியில் 45 கிராம அலுவலர் பிரிவுகளில் 35681 வாக்காளர்களும், சாவகச்சேரி தொகுதியில் 60 கிராம அலுவலர் பிரிவுகளில் 50494 வாக்காளர்களும், நல்லூர் தொகுதியில் 40 கிராம அலுவலர் பிரிவுகளில் 45248 வாக்காளர்களும், யாழ்.தொகுதியில் 28 கிராம அலுவலர் பிரிவுகளில் 32269 வாக்காளர்களுமாக மொத்தம் யாழ். மாவட்டத்தில் 2012ல் 4 இலட்சத்து 26703 வாக்காளர்களும், 2013ல் அதிகரித்து 4இலட்சத்து 41ஆயிரத்து 509ஆகவும் காணப்படுகின்றது.
கிளிநொச்சியில் 95 கிராம அலுவலர் பிரிவுகளில் 2012ல் 68 ஆயிரத்து 589ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2013ல் 75ஆயிரத்து 465ஆக உயர்ந்திருக்கின்றது.
இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையை காணமுடிகின்றது. ஆனால் மேலும் 1இலட்சத்துக்கும் அதிகமானோர் தம்மை வாக்காளர் பதிவுகளுக்குள் சேர்த்துக் கொள்ளாமல் கவலையீனமாக இருக்கிறார்கள் என மதிப்பீடுகள் வெளிப்படுத்துவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய வாக்காளர் பதிவுகளில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ விலகியிருப்பதன் மூலம் எமது தமிழ் மக்களின் பிரிதிநிதித்துவம் பல்கலைக்கழக தெரிவு எண்ணிக்கை நியமனங்கள் என பல்வேறுபட்ட முக்கிமான விடயங்களில் பின்னடைவுகள் ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே நடப்பு ஆண்டுக்கான வாக்காளர்பதிவுகளில் சகலரும் தங்களை உட்படுத்த வேண்டுமென சமூக அக்கறையுடன் வலிறுத்தப்படுகின்றது.

ad

ad