காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதுதொடர்பாக ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் ராணுவத்திற்கு கண்டிப்பான உத்தரவை அனுப்பியுள்ளார். அதில், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் நிலைகளில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று கூறியுள்ளார்.