புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

சமநிலையில் முடிந்த மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸி.யிடம் தொடரை இழந்தது இந்தியா


அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியை இந்தியா போராடி சமநிலை  செய்தது.
 
அவுஸ்திரேலியா வெற்றி இலக்காக கொடுத்த 384 ஓட்டங்களை விரட்ட 70 ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் சமநிலையை நோக்கியே இந்திய அணி விளையாடியது. ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்தது.
 
2ஆவது இன்னிங்ஸில் தொடக்க வீரராக விஜய்யோடு களமிறங்கிய தவான், இரண்டாவது ஓவரிலேயே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வீழ்ந்து அதிர்ச்சயளித்தார்.
 
தொடர்ந்து களமிறங்கிய புதிய வீரர் ராகுல் அடுத்த ஓவரில் 1 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் முரளி விஜய் 11 ஓட்டங்களுக்கு பெவிலியன்  திரும்ப 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது.
 
அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே கோஹ்லி முதல் இன்னிங்ஸைப் போலவே அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் பொறுமையாக ஆடி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சோதித்தனர்.
 
கோஹ்லி அரைச்சதம் கடந்தார். ஆனால் தேநீர் இடைவேளைக்கு அடுத்த ஓவரிலியே கோஹ்லி 54 ஓட்டங்களுக்கு நடையை கட்டினார்.
 
புஜாரா சிறிது நிலைத்து ஆடினாலும் ஜான்சனின் வேகத்தில் 21 ஓட்டங்களுக்கு ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு ரஹானே ஆட்டமிழக்க அஸ்வின் டோனியுடன் களத்தில் இணைந்தார்.
 
6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி நிலைத்து நின்று போட்டியை சமநிலை செய்யுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவியது.
 
நாள் முடிய 15 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் அஸ்வின், டோனி இருவரும் நிலைத்து ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
அவுஸ்திரேலிய பந்துவீச்சின் யுக்தி பெரிய அளவில் சோபிக்காததால், நாள் முடிய 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே ஸ்மித் ஆட்டத்தை முடித்துக் கொள்ள முன்வந்தார். இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
 
கடைசியில் அஸ்வின் 34 பந்துகளில் 8 ஓட்டங்களும் டோனி 39 பந்துகளில் 24 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
 
கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் சமநிலை செய்தது ரசிகர்களை நிம்மதியடையச் செய்திருக்கும்.
 
முதல் இன்னிங்ஸில் 74 ஓட்டங்கள் எடுத்து இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரயன் ஹாரிஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
 
நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 6ம் திகதி சிட்னியில் தொடங்குகிறது.

ad

ad