இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத முதலாவது உள்ளுராட்சி சபையாக அல்லே பிரதேச சபை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்லே பிரதேச சபையிலுள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மூவர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து எதிர்க் கட்சியில்லாத ஒரு உள்ளுராட்சி சபையாக அல்லே பிரதேச சபை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரதேச சபையில் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தின் 7 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களுமாக மொத்தம் 10 உறுப்பினர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.