எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களில் தெரிவு செய்யபட்டு 5000 பேரிடம் நடத்தப்பட்ட இவ்வாய்வில் அனைத்து இனம், ஆண், பெண், தொழில், வயது என்பவற்றை உள்ளடக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொடர்பாடல் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் பேராரியர் ரோஹன பியதாச தெரிவித்தார்.
இதன்படி எதிரணியின் பொது வேட்டபாளர் மைத்திரிபால சிரிசேன 44 வீத வாக்குகளை மாத்திரமே பெறுவார் எனவும் மிகுதி 3 வீதமானவர்கள் வாக்களிக்காமல் போகலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.