புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்காளதேசத்திடம் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 5–வது லீக் ஆட்டம் நடைப்பெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வங்காளதேசம் அணியின் தொடக்கவீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் சற்று நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் தமிம் இக்பால் 16 ரன்னில் வெளியேற, பின்னர் பொறுப்புடன் விளையாடிய மற்றொரு தொடக்கவீரர் சவுமியா சர்கார் 42 ரன்னில் அவுட்டானார். பின்னர் அணியை சரிவிலிருந்து மீட்க ஷகிப் அல்ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய இவ்விரு வீரர்களும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர்.  இந்த ஜோடியில், பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல்-ஹசன் 75 ரன்னில் போல்ட் ஆனார். பின் களமிறங்கிய முகமது மிதுன் 21 ரன்னில் அவுட்டாக, சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னில் கேட்ச் ஆனார். பின் மொசாடெக் ஹூசைன் 26 ரன்னில் அவுட்டாக, மக்முதுல்லா 46 ரன்னிலும் , மெஹிதி ஹசன் 5 ரன்னிலும் ஆட்டமிழாக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 330 ரன்களை எடுத்தது.

தென்ஆப்பிரிக்கா அணியில் பெலக்வாயோ, இம்ரான் தாஹிர், மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன்  தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டான் டி காக் மற்றும் மார்க்ராம் களமிறங்கினர். இதில் குயின்டான் டி காக் 23 ரன்னில் ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் அணிக்காக 45 ரன் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். தனது அரைசதத்தை பதிவுசெய்த டு பிளிஸ்சிஸ் 62 ரன்னில் அவுட் ஆனார். ஓரளவு ரன் சேர்த்த டேவிட் மில்லர் 38 ரன்னில் வெளியேற வான்டெர் துஸ்சென் தனது பங்கிற்க்கு 41 ரன் சேர்த்த நிலையில் போல்ட் ஆனார். அவரை தொடர்ந்து பெலக்வாயோ 8 ரன்னிலும், மோரிஸ் 10 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய டுமினி 45 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 309 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம்  வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

வங்காளதேசம் அணியில் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்களும், முகமது சைபுதீன் 2 விக்கெட்களும்,  மெஹிதி ஹசன் மற்றும் ஷகிப் அல்–ஹசன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ad

ad