புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2025

www.pungudutivuswiss.com
செம்மணியில் சிலர் உயிருடன் புதைப்பு!
[Thursday 2025-08-14 07:00]


செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்
ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம்,என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என தெரிவித்துள்ளார்.("if they were already dead, the bodies wouldn't be bent," with some of them displaying twisted limbs.)

சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்,ஆனால் நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது,இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது,பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழு யாழ்ப்பாணத்திற்கும்,என தெரிவித்துள்ளார்.

ad

ad