![]() தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார். |
-
3 பிப்., 2024
தரமற்ற ஊசிமருந்து இறக்குமதி - 10 மணி நேர விசாரணைக்குப் பின் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!
30 ஜன., 2024
இன்று கொழும்பை முடக்கும் பாரிய பேரணி]
![]() பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் மாபெரும் கண்டன பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்த போராட்டம், இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். |
29 ஜன., 2024
ஜோர்டானில் உள்ள அமெரிக்க முகாம் மீது தாக்குதல்: 3 படையினர் பலி! 34 படையினர் காயம்!
கலகத்தில் ஈடுபட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
![]() இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளது |
அந்தரத்தில் தமிழரசுக் கட்சி- மாவையே தலைவராக நீடிக்கிறாராம்!
![]() திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவு தொடர்பாக அறிவிக்கப்பட்ட முடிவுகளை அப்படியே அந்தரத்தில் பேணவும், இறுதித் தீர்மானங்களை எடுப்பதைத் தள்ளிப் போடவும் நேற்று மதியம் மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார் |
இரண்டு மூன்று துண்டுகளாக உடைந்தது தமிழரசு
![]() இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். |
28 ஜன., 2024
பிகார் முதல்வராக நிதிஷ் குமார் 9-வது முறையாக பதவியேற்பு - பாஜகவுக்கு 2 துணை முதல்வர்கள்
சிறிதரன் அழைப்புக்கு ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் நிபந்தனை
![]() இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தததைப்போன்று ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாகச் செயற்படுவதற்கான பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ள நிலையில், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கூட்டுக் கட்சியாக பதிவு செய்ய வேண்டும், பொதுச்சின்னமொன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளன. |
27 ஜன., 2024
தமிழரசின் பொதுச்செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு- குகதாசன் வெற்றி!
![]() தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குகதாசனுக்கு 113 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
26 ஜன., 2024
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்துள்ள 11 கோரிக்கைகள்!
![]() ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வான தீர்வை பெறுவதற்காக நாங்கள் முன்வைக்கும் 11 கோரிக்கைகளை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கட்சிகளும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார். |
காசாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 24 இஸ்ரேலிய வீரர்கள்!
![]() பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் திங்கட்கிழமை 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
பவதாரிணி
25 ஜன., 2024
கந்தகாட்டில் மீண்டும் பதற்றம் - மோதலை அடுத்து 40 கைதிகள் தப்பியோட்டம்
![]() கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் பின்னர், 35 முதல் 40 கைதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது |
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி! Top News
![]() கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் |
24 ஜன., 2024
பெலியத்த படுகொலைகள் - முக்கிய சூத்திரதாரி கைது
![]() பெலியத்தவில் திங்கட்கிழமை ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
![]() பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. |
ஆனையிறவில் அதிகாலையில் கோர விபத்து! - ஒருவர் பலி, 8பேர் காயம்.
![]() கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் |