ஞாயிறு, ஜூலை 21, 2019

ஆவா குழு மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழு உறுப்பினர்கள் மீது- நேற்றிரவு 8.40 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

, ருவான் குணசேகர தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழு உறுப்பினர்கள் மீது- நேற்றிரவு 8.40 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்தார்.

“மானிப்பாய் பொலிஸ் பிரிவில் மானிப்பாய், இணுவில் வீதியில் ஆவா குழு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் இணைந்து ஆவா குழுவைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.

பொலிஸ் சிறப்பு அணி மானிப்பாய் – இணுவில் வீதியில் களமிறக்கப்பட்டிருந்தது. ஆவா குழுவைச் சேர்ந்தோர் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை வழிமறித்துக் கைது செய்ய பொலிஸார் முற்பட்டனர். எனினும் தப்பிக்க முற்பட்ட போது ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கஜேந்திரா வாள் ஒன்றும் நீண்ட வாள் ஒன்றும் சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் நால்வர் தப்பித்துள்ளனர். அவர்களைத் தேடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவத்தையடுத்து மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மானிப்பாய் பகுதிகளில் பதற்றநிலை காணப்பட்டது.