14 ஜன., 2015

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

news
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாகர்கோவில் பிரதேசத்தில் குறித்த நிறுவனம் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி 16 ஆம் திகதி காலை நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த நிறுவனம் முன்னாள் அமைச்சரும், ஈபிடிபி கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.