14 ஜன., 2015

ஜெயலலிதா கோட்டையில் குஷ்புவா

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: பொன்.ராதாகிஷ்ணன் 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து, இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.