14 ஜன., 2015

ஜே.வி.பியின் செயற்பாடுகளால் குழம்பி போயிருக்கும் ராஜபக்ஷவினர்


மகிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களை சூழவிருந்த நபர்கள் மேற்கொண்ட நிதி மோசடிகள் குறித்து ஜே.வி.பி நேற்று முறைப்பாடு செய்ததை அடுத்து மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
ஜே.வி.பி நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.
இவர்களின் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்களான ரோஹித்த மற்றும் யோஷித ஆகியோர் முக்கிய நபர்கள் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் தமக்கு வழங்கப்பட்டிருந்த ராஜதந்திர கடவுச்சீட்டுக்கு பதிலாக சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை நாமல் ராஜபக்ஷ எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார் எனக் கூறியிருந்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நபர்கள் தம்மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விடக் கூடாது என்ற காரணத்தினால் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பியின் செயற்பாடுகள் எவரும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் முன்னாள் ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளதுடன் மோசடியாளர்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.