புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 ஜன., 2015

மெஸ்ஸி அந்தர் பல்டி: பார்சிலோனா அணியிலிருந்து விலகல்


அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
பார்சிலோனா கழக அணியின் மேலாளர் லூயிஸ் என்ரிக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியிலிருந்து மெஸ்ஸி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் இதனை மெஸ்ஸி உடனடியாக மறுத்தார்.
இந்த நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த மெஸ்ஸி திடீரென பல்டி அடித்துள்ளார். அடுத்த ஆண்டு நான் எங்கு இருப்பேன் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறுவதை மெஸ்ஸி சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.