14 ஜன., 2015

விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சி!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சிப்பதாக தேசிய ஜனநாயக முன்னணி தெரிவிக்கின்றது.
இன்று அக்கட்சியின் தலைமயகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஜனநாயக முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச இன்று லஞ்சம், ஊழல் ஆணைக்குழுவிடம் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக புகார் தொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அவரின் நடப்பு சொத்துகள் பெற்றுக்கொண்ட விதம் சம்பந்தமாக குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.