14 ஜன., 2015

அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன்! திமுக வேட்பாளர் பேட்டி!திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது. 

இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில், திமுக வேட்பாளரான ஆனந்த் புதன்கிழமை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, தனது பிரச்சாரத்தை தொடங்கினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை வேட்பாளராக அறிவித்த கட்சி மேலிடத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தார்.