-
25 செப்., 2013
செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய
கென்யத் தலைநகர் நைரோபியின் வெஸ்ட்கேட் ஷாப்பிங் காம்பிளக்ஸ் வர்த்தக வளாகம், தீவிரவதிகளின் முற்றுகைக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையிlல், இவ்வளாகத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்கில் ஆயுததாரிகள் யாரும் எஞ்சியிருக்கிறார்களா என்று வர்த்தக வளாகத்திற்குள் துருப்பினர் தேடிவருகின்றார்கள்.BBC
செவ்வாய்க்கிழமை காலையிலும்கூட அந்த இடத்தில் வெடிச்சத்தமும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டிருந்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பின்னர் கூறினார்.
இந்த வாரமும் , கடந்த வாரமும் "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகப் பல கட்டுரைகள் வெளியாகியிருந்தன. "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டின் பத்தி எழுத்தாளர் "Rosie DiManno" இலங்கை நிலவரங்களை நேரில் சென்று அவதானித்துக் கட்டுரைகளை அங்கிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறார். இன்று அவர் எழுதி "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் வெளியான கட்டுரையின் தலைப்பு "New era begins after Tamils win key election". அந்தக் கட்டுரையில் // Tamils were not bought off by the extensive reconstruction, all the multi-millions - from China, mostly-poured into new roads , new infrastructure, new hospitals, new commercial buildings, even a new sports stadium that's going up outside the new trail station.// இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
16 மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி முறைகேடாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 27–ந்தேதி கடப்பா தொகுதி எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்களை புகுத்த கோத்தபாய திட்டம்
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது.
நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம் - இந்திய உதவிகள் இனி வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே சு.நாச்சியப்பன்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பலத்த சர்ச்சைகளின் பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டமைப்பு கூட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுகாலை முதல் மாலைவரையில் தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுகாலை முதல் மாலைவரையில் தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிபெற்ற தோல்வியடைந்த அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)